பெரியார் – பகுத்தறிவு – brand – பிள்ளையார்

“ஒரு மனுசன் மகிழ்ச்சியா இருக்கணும் எண்டா, அவன்ட புத்திய தெளிவா இருக்கணும். அவன்ட புத்தி தெளிவாக இருக்கணும் எண்டா அவன் பெரியார்-அ வாசிக்கணும்.” – சத்யராஜ் – இன்றைய Koffee with DD நிகழ்ச்சியில்.

சமயங்களைப் போல, ஏனைய சில கொள்கைகள் போல பெரியாரும் ஒரு brand ஆக மாறிவிட்டார் என்றே நினைக்கிறேன். பெரியார் “வழிபாடு” என்பது ஓரளவுக்கு வந்துவிட்டது.

ஆனால், ஆரம்ப வகுப்புக்களில் “பிள்ளையார் நடனமாடியதைப் பார்த்துச் சிரித்த சந்திரனுக்கு பிள்ளையார் சாபம் கொடுத்தார்” என்று சொன்ன சமயப் புத்தகங்களுக்குப் பிறகு, என்னிடம் சமயங்களின் மீது அதிக கேள்விகளை ஏற்படுத்தியது பெரியார் தான்.

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர் பெரியாரின் புக்கங்களைத் தேடித்தேடி வாசித்தது இன்னமும் ஞாபகமிருக்கிறது. இப்போது வாசிப்பது, கேட்பது, பார்ப்பது வேறு விடயங்கள் என்றாலும், பெரியார் என் மீது ஏற்படுத்திய தாக்கங்கள் மறக்கமுடியாதன.

Gopikrishna Kanagalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *