#RanaViruMeetup

 

போர் நாயகர்களுக்கான காப்பகமான ரணவிரு சேவன நிலையம், ராகமவில் அமைந்துள்ளது. போரில் காயமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட படையினர், 3 விடுதிகளில் வைத்துப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.


இங்குள்ளவர்களுக்கான தேவைகள் போதுமான முறையில் நிவர்த்தி செய்யப்பட்டிருக்காத நிலையில், இலங்கையின் சமூக ஊடகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் இணைந்து, Rana Viru Meetup என்ற ஒன்றுகூடலை ஏற்பாடு செய்துள்ளனர். எதிர்வரும் 25ஆம் திகதியன்று, இந்த ஒன்றுகூடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, அங்குள்ளவர்களின் தேவைகளுக்காக, சக்கர நாற்காலிகள், முழங்கை முட்டுக்கொடுப்பான் (Elbow Clutches – Comfort வியாபாரக் குறி), கூரை மின்விசிறிகள், A4, A3, குறிப்புப் புத்தகங்கள் போன்றன, அச்சுப் பொறிக்கான LQ 2090 றிபன்கள் போன்றன தேவைப்படுகின்றன.

 

இதற்குப் பங்களிப்பு மேற்கொள்ள விரும்புவோர், பின்வரும் வங்கிக் கணக்குக்கு தங்களது பங்களிப்பை மேற்கொள்ள முடியும்.
வங்கி: சம்பத் வங்கி
கிளை: Colombo Super
பெயர்: M.D. Senarath-Yapa அல்லது W.G.T.Fernando
கணக்கு இலக்கம்: 1175-5482-2773

 

மேலதிக விபரங்களுக்கும், உங்கள் பங்குபெறலை உறுதிப்படுத்துவதற்கும் இந்த சுட்டிக்குச் செல்லவும்.

 

இதற்கான ட்விற்றர் hashtag: #RanaViruMeetup
ட்விற்றர் கணக்கு: https://twitter.com/RanaViruMeetup
பேஸ்புக் முகவரி: https://www.facebook.com/RanaViruMeetup
பேஸ்புக் நிகழ்வு: https://www.facebook.com/events/705982762861410/
இணையத்தள முகவரி: http://ranavirumeetup.org

 

மேலதிக தேவைகளுக்கு, இந்நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான டபிள்யு. ஜி.ரி. பெர்னான்டோவை அவரது ட்விற்றரூடாக தொடர்பு கொள்ள முடியும்.

Gopikrishna Kanagalingam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *